Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

மூதாட்டிக்கு ஒரேநாளில் 2 முறை கரோனா தடுப்பூசி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைஅடுத்த வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் மனைவி அலமேலு (70). விவசாயத் தொழிலாளியான இவர், ஆக.15-ம் தேதி சரபோஜிராஜபுரம் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர், அவர் அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அப்போது, மருத்துவப் பணியாளர் வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். வரிசையில் சென்ற மூதாட்டி அலமேலுவுக்கு 2-வது முறையாக மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. விவரங்களை பதிவு செய்யும்போது 2 தடுப்பூசி செலுத்தியது தெரியவந்தது. அதிர்ச்சிஅடைந்த செவிலியர்கள் மருத்துவரிடம் கூறினர்.

இதையடுத்து மூதாட்டி, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2 நாள் கண்காணிப்புக்குப் பிறகு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் சக தொழிலாளர்கள், 2 முறை தடுப்பூசி போட்டால்தான் சம்பளம் தருவார்கள் என்று கூறியதை அலமேலு தவறாக புரிந்து கொண்டு 2 முறை வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு கொண்டதாக சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர் விஜயகுமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x