வன ஊழியர்களை கட்டிப்போட்டு சந்தன மரங்கள் கடத்தல்

வன ஊழியர்களை கட்டிப்போட்டு சந்தன மரங்கள் கடத்தல்
Updated on
1 min read

அரூரில் வனஊழியர்களை கட்டிப் போட்டு, ரூ. 2.25 லட்சம் மதிப் புள்ள சந்தன மரங்களை கடத்திச் சென்ற 15 பேர் கொண்ட கும் பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் - வர்ணதீர்த்தம் சாலையில் மாவட்ட வனத்துறை அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இந்த அலுவலகத் தின் உள்ளே மொரப்பூர், அரூர் வனத்துறை அலுவலகங்கள் தனி, தனியாக உள்ளன. இரு அலு வலகத்திலும் 50 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வரு கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு வனவர் தேவ ராஜூலு, வனக்காப்பாளர் சின்ன தம்பி ஆகியோர் இரவு பணியில் இருந்தனர். மாவட்ட வன அலுவல கத்தில் பணிபுரியும் இணை உதவி யாளர் சுரேஷ் என்பவர் ஊருக்கு செல்லும் பேருந்தை தவற விட்டதால் அலுவலகத்தில் தங்கி யிருந்தார்.

இந்நிலையில் நேற்று அதி காலை 2.30 மணியளவில் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்தபடி, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர்.

அங்கு பணியில் இருந்த தேவ ராஜுலு, சின்னதம்பி ஆகியோர் தடுத்து விசாரிக்கவே, அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கினர். மேலும், சத்தம் கேட்டு வந்த சுரேஷை, சுற்றி வளைத்து தாக்கிய கும்பல், பின்னர் 3 பேரின் வாயில் துணியை அடைத்தனர். தொடர்ந்து கை, காலை கட்டி அங்கிருந்த புதரில் வீசினர்.

அதனைத் தொடர்ந்து அந்த கும்பலில் வந்த 5 பேர் சுற்றி லும் கண்காணிக்கவும், மற்றவர் கள் அங்கிருந்த 2 சந்தன மரங் களை வெட்டினர். பின்னர் துண்டு, துண்டாக அறுத்து எடுத்துக் கொண்டு காலை 5.15 மணியள வில் தப்பியோடினர். புதருக்குள் இருந்த 3 பேரும் கட்டுகளை அவிழ்த் துக் கொண்டு மேலே வந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத் துக்கு வந்த வனத்துறை, காவல் துறை அதிகாரிகள், மரங்கள் வெட் டப்பட்ட இடத்தை பார்வை யிட்டனர். காயம் அடைந்த வன ஊழியர்களை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, 15 பேர் கொண்ட மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

கடத்தப்பட்ட சந்தன கட்டைகள் சுமார் 150 கிலோ இருக்கும் எனத் தெரிகிறது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in