

சென்னையில் மட்டும் வாக்காளர் பட்டியலில் இருந்து 1.85 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக மாநக ராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநக ராட்சி அலுவலகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
அனைத்து கட்சிக் கூட்டம்
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ப.சந்திரமோகன் தலைமை வகித்தார்.
துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) டி.ஜி.வினய், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) கே.ரமேஷ் மற்றும் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பிஎஸ்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.
ஆலோசனைகள்
பெயர் நீக்கம் தொடர் பாக அரசியல் கட்சி பிரதிநிதி களின் கருத்துகள் கேட்கப் பட்டன. தொடர்ந்து, அவர்களிடம் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் வழங்கப் பட்டன.
அதன்படி, சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இடம் பெயர்ந்தவர்கள் 54,317 பேர், இறந்தவர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர், இருமுறை வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்த 14,131 பேர், வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் இல் லாத 6,004 பேர் என மொத் தம் 1 லட்சத்து 85 ஆயி ரத்து 169 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.