இந்தியாவில் 85 சதவீதம் பொருட்களுக்கு சர்வதேச நிறுவனங்கள்தான் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கின்றன: அறிவுசார் சொத்துரிமை ஆணையத் தலைவர் ஆதங்கம்

இந்தியாவில் 85 சதவீதம் பொருட்களுக்கு சர்வதேச நிறுவனங்கள்தான் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கின்றன: அறிவுசார் சொத்துரிமை ஆணையத் தலைவர் ஆதங்கம்
Updated on
2 min read

இந்தியாவில் 85 சதவீதம் பொருட் களுக்கு சர்வதேச நிறுவனங் கள்தான் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கின்றன. இந்நிலை மாற வேண்டும் என அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் நீதிபதி கே.என்.பாட்ஷா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

ஒரு நாட்டின் பொருளாதாரத் தில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு மிகமிக இன்றியமையாதது. ஆனால் உலக அளவில் அறிவுசார் சொத்துரிமையிலும், புவிசார் குறியீடு பெறுவதிலும் இந்தியர்கள் மிகவும் பின்தங்கியே உள்ளனர்.

வேம்பு, மஞ்சள், நிலவேம்பு, மாதுளை, வர்மம் போன்ற எத்தனையோ இயற்கை பாரம்பரிய மருத்துவ முறைகள் நம்மிடம் உள்ளன. இதைத்தான் இப்போது மேலை நாடுகள் காப்பி அடிக்கின்றன. உணவிலேயே நோய்களை குணப்படுத்தும் அற்புதம் இந்தியர்களிடம்தான் உள்ளது. ஆனால் அதற்கு சட்டபூர்வ காப்புரிமை கோர நாம் சிந்திப்பதில்லை.

இதனால் இந்தியாவில் சுமார் 85 சதவீதம் பொருட்களுக்கு சர்வதேச நிறுவனங்கள்தான் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கின்றன. ஆனால் பல வெளிநாட்டு நிறுவ னங்கள் தங்களின் பழைய கண்டுபிடிப்புகளுக்கு புது வடிவம் கொடுத்து காப்புரிமை கோருகின் றன. அதை ஒருபோதும் ஏற்க முடியாது. அந்த புதிய பொருளில், புதிய கண்டுபிடிப்புகள், புதிய உத்திகள் கூடுதலாக இருந்தால் மட்டுமே அவற்றுக்கு காப்புரிமை அளிக்கப்படுகிறது.

அறிவுசார் சொத்துரிமையில் நாம் சிறந்து விளங்கினால் ரூ. 8 ஆயிரத்துக்கு வாங்க வேண்டிய புற்றுநோய்க்கான மருந்தை பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை நேரிடாது.

அமெரிக்க வர்த்தக மையம் வெளியிட்ட ஒரு பட்டியலில் அறிவுசார் சொத்துரிமை, பதிப்புரிமை, உரிமத்தை பாதுகாப்பதில் இந்தியா 6.24 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், அறிவுசார் சொத்துரிமையில் இந்தியா போதிய விழிப்புணர்வு பெற வேண்டும்.

இதற்காக மத்திய அரசு தற் போது ‘மேக் இன் இந்தியா’ போன்ற புதிய நடைமுறைகளையும், சலுகைகளையும் அளித்து வருகிறது.

2012-13 காலகட்டத்தில்தான் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைக்கு கட்டாய உரிமம், பதிப்புரிமை திருத்தச் சட்டங்களின் மூலம் புதிய விடியல் கிடைத்துள்ளது.

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியா உலகி லேயே பெரிய நாடாக உரு வெடுத்து வருகிறது. 600 பல்கலைக்கழகங்கள், 30 ஆயிரம் கல்லூரிகள் என உயர் கல்வியில் இந்தியா சிறந்து வருகிறது. இந்த கல்லூரிகள் ஒவ்வொன்றும் தங்களது மாணவர்களின் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு 5 சதவீதம் காப்புரிமை கோரினாலே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை அறிவுசார் சொத் துரிமை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

போர்ப்ஸ் பத்திரிகை வெளி யிட்ட 100 புதுமை கண்டுபிடிப்பு நிறுவனங்களில் டிசிஎஸ், இன்போசிஸ், பஜாஜ் ஆகிய 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோல அந்த பத்திரிகை மேலும் 9 வளரும் இந்திய நிறுவனங்களை அடையாளம் கண்டு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் பொருட்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப் பிக்கப்படுகிறது. பெரும்பாலும் மருந்து பொருட்களுக்குத்தான் அதிக விண்ணப்பங்கள் பெறப் படுகின்றன. இந்த எண்ணிக் கையில் இந்தியா உலகில் 7-வது இடம் வகிக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் இப்போதுதான் நாம் விழித்துக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in