

கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அருகே உள்ள கீரமங்கலத்தில் நேற்று நடைபெற்ற கட்சிப் பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கெயில் பிரச்சினையில் தமிழக அரசின் மெத்தனப்போக்கால், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு மாறுபட்டிருக்கிறது. இதற்கு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் நிரந்த தீர்வு ஏற்படும். ஜல்லிக்கட்டு நடக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அது நடக்கவில்லை.
அதேபோல, தற்போது விவசாயிகளை பாதிக்காத வகையில் தமிழகத்தில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படும் என்கிறார். அதில் நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடி வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.