மரவள்ளிக்கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள்

மரவள்ளிக்கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள்
Updated on
1 min read

சட்டப்பேரவை அலுவல் நேற்று காலை தொடங்கிய நிலையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைர்பழனிசாமி பேசினார்.

அப்போது, பேரவைத் தலைவர் அனுமதி அளித்த நிலையில்,அவை முன்னவர் துரைமுருகன்,பூஜ்ய நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து விளக்கினார். பிறகு,அதிமுக உறுப்பினர்கள் பேசஅனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. இப்பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டபோது கடந்த ஆட்சியில் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, நிலங்களில்மருந்து தெளித்து, பயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற 10 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலில் 10 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதிக்கு வேளாண் அதிகாரிகளை அனுப்பி,நிதி ஒதுக்கி, மாவுப்பூச்சி பாதிப்பில் இருந்து விவசாயிகளை காப்பதுடன், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர்எம்ஆர்கே பன்னீர்செல்வம், ‘‘கடந்த ஆண்டில் மாவுப்பூச்சிதாக்குதலை முழுமையாக ஒழிக்காததால் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல்வந்ததும், வேளாண் அதிகாரிகள் சென்று, ஆய்வு செய்து மருந்து தெளித்துள்ளனர். இதற்கு ஏக்கருக்கு ரூ.3,900 செலவாகிறது. பூச்சி தாக்குதலை குறுகிய காலத்தில் தடுத்துள்ளோம். முழுமையாக இத்தாக்குதலை ஒழித்து, பயிரிடும் விவசாயிகளைக் காப்போம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in