

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்டம்பர் 13 அன்று நிறைவுபெறும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள் ஆக. 14 அன்று வேளாண்மைத் துறைக்கென முதன்முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரு பட்ஜெட்டுகளும் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று (ஆக.16) தொடங்கியது. இன்று (ஆக.17) இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செப். 21-ம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தொடர் முன்கூட்டியே செப். 13-ம் தேதியுடன் நிறைவு பெறும் என, சபாநாயகர் மு.அப்பாவு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
திருத்திய நிகழ்ச்சி நிரல்: