Published : 17 Aug 2021 01:13 PM
Last Updated : 17 Aug 2021 01:13 PM

கொள்கைக் குன்றாக உருவானவர் திருமாவளவன்: முதல்வர் ஸ்டாலின், கமல் பிறந்த நாள் வாழ்த்து

தொல். திருமாவளவன் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (ஆக.17) தன் 59-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "திராவிடச் சிறுத்தை திருமாவளவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்ச் சமூகத்துக்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, திருமாவளவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நீடூழி வாழ்க!" எனப் பதிவிட்டுள்ளார்.

— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x