

திண்டிவனம் -புதுச்சேரி சாலையில் தைலாபுரம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 பேர் காயமடைந்துள் ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு தைலாபுரத்தில் இருந்து சின்னகாட்ராம்பாக்கம் வழியாக புதுச்சேரியில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்தவாறு பாதுகாப்பு வாகனமும் சென்றுள்ளது. இந்தப் பாதுகாப்பு வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் முந்திச் செல்ல முயன்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூர்த்தி(40), முத்துகிருஷ்ணன்(48) மற்றும் சாலையோரம் நின்றிருந்து சுரேந்தர்(22) முத்துகிருஷ்ணன் (37), மணிபால்(28) ஆறுமுகம் (60) ஆகியார் படுகாயமடைந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துத் தொடர்பாக திண்டிவனம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.