

தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
“விசாரணைக்காக காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படும் நபர்களை போலீஸார் கடுமையாக தாக்குகின்றனர். இதில் பலர் மரணம் அடைகின்றனர். இது போன்று சம்பவங்களை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் விசா ரணைகளை பதிவு செய்ய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ்,
‘மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இதன் விளைவாக 2013-ம் ஆண்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு வரை கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் பின்னர் அந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இந்த பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “காவல் நிலையங்களில் கண் காணிப்பு கேமராக்களை பொருத்து வதில் நிறைய நடைமுறை சிக்கல் கள் இருந்தன. இதனால் முதல் கட்டமாக 251 காவல் நிலையங் களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கே 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இனிமேல் இந்த காலதாமதம் இருக்காது.
போலீஸ் படையை நவீனப் படுத்துவதற்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. இருந்தாலும் கிடைக்கும் நிதியை வைத்து மீதமுள்ள 1,316 காவல் நிலையங் களில் ஆண்டுக்கு 263 காவல் நிலையங்கள் வீதம் ரூ.6.3 கோடி செலவில் 5 ஆண்டுகளில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படும் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறோம்.
அதன்படி காவல் நிலையங் களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறோம். காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் தற்போது கொஞ்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.