

திருவண்ணாமலை தீர்த்தவாரியில் 4 பேர் உயிரிழப்பு சம்பவம் தொடர் பாக, அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மஹோதய அமாவாசையை யொட்டி திருவண்ணாமலை அண் ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடைபெற் றது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அய்யங்குளத்தில் மூழ்கி புண்ணியகோடி, வெங்கட் ராமன், மணிகண்டன், சிவா ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தி.மலை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தீர்த்தவாரிக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் நேரில் வந்து விசாரணையைத் தொடங்கினார். கோயில் ஊழியர் கள், சிவாச்சாரியார்களிடம் நடந்த சம்பவம் குறித்த கேட்டறிந்தார்.
இதற்கிடையில், அண்ணா மலையார் கோயில் மணியக்காரர் நாகமணி, ஊழியர் அண்ணாமலை ஆகியோரை கோயில் இணை ஆணையர் பி.வாசுநாதன் நேற்று பணியிடை நீக்கம் செய்தார்.
முதல்வர் ரூ.1 லட்சம் நிவாரணம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் கோயில் அருகில் உள்ள அய்யங்குள நீரில் மூழ்கி இறந்தனர். இவர்கள் குடும்பங் களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
விபத்து நிவாரணம்
மேலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த குருவன், சூதளத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமியம்மா, விழுப்புரம் மேல் நாரியப்பனூரைச் சேர்ந்த கோமதுரை, பிள்ளைச்சாவடி குப்பத்தைச் சேர்ந்த காத்தவராயன், கரூர் மாவட்டம் ஆரியூரைச் சேர்ந்த கருப்புசாமி, தருமபுரி மாவட்டம் சின்னபூம்பாளையத்தைச் சேர்ந்த அஞ்சலி, ஹரிணி, ராஜேஷ்வரி, புவனேஸ்வரி, சரிதா ஆகிய 11 பேரும் பல்வேறு விபத்துகளில் இறந்தனர்.
இவர்களுக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங் கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தை அமாவாசை நாளில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்பதை அறிந்து அதற்கான முன்னேற்பாடுகள், பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் தவறிவிட்டது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி பக்தர்கள் வரிசையாக சென்று நீராடவும், தரிசனம் செய்யவும் ஆபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்யவும் எவ்வித ஏற்பாடுகளும் அங்கு செய்யப்படவில்லை. 4 பேர் உயிரி ழந்த சம்பவத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.