

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மாவோயிஸ்ட் என சந்தேகப்படும் நபர் ஒருவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மாவோயிஸ்ட் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் மயர்பூரைச் சேர்ந்த சுரேந்திர யாதவ் (32) கைது செய்யப்பட்டார். அவரிடம் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் ஜார்க்கண்ட் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்" என்றனர்.