வேளாண் பட்ஜெட்: கறவை மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு ரூ.14.28 கோடி நிதி

வேளாண் பட்ஜெட்: கறவை மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு ரூ.14.28 கோடி நிதி
Updated on
1 min read

கிராம அளவில் கறவை மாடு வளர்ப்போரின் இல்லத்துக்கே சென்று கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு, ரூ.14.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

கால்நடைகளுக்கு தேவையான பசுந் தீவனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், பசுந்தீவனம் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைச் சேமித்து வைத்து வறண்ட காலங்களில் கால்நடைகளுக்கு வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு ஊறுகாய்ப் புல் தயாரிக்கும் அலகுகள் அமைக்க ரூ.1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பசுந்தீவன வங்கிகள் ஏற்படுத்தவும், கால்நடை நலம், நாட்டுக் கோழி இனப் பெருக்கப் பண்ணை நிறுவுதல் ஆகியவற்றுக்கும் ரூ.27.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராம அளவில் கறவை மாடு வளர்ப்போரின் இல்லத்துக்கே சென்று கால்நடைகளுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு ரூ.14.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in