

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் சிறப்பு நூல் பகிர்வரங்கம் இன்று (ஞாயிறு) மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது. இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் வகையில் நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய‘போர்முனை முதல் தெருமுனை வரை’ எனும் நூல் குறித்த சிறப்பு பகிர்வரங்கம் நடைபெறுகிறது.
பெங்களூருவில் உள்ள தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான டாக்டர் வி.டில்லிபாபு, அறிவியல் கருத்துகளை பரவலாக கொண்டுசேர்க்கும் நோக்கில், எளிய தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவரதுஇந்த நூலை ‘தமிழ் திசை’ வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு பகிர்வரங்கில், டெல்லியில் உள்ள அறிவியல், தொழில்நுட்பத் துறை விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், திரைப்பட இயக்குநரும், கவிஞருமான என்.லிங்குசாமி இருவரும் நூல் குறித்ததங்களது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
நிறைவாக, என்டிஆர்எஃப் இயக்குநரும், நூல் ஆசிரியருமான டாக்டர் வி.டில்லிபாபு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
இணைய வழியில் நடக்கும் இந்த நிகழ்வில், ஆர்வம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/37sWJm6https://bit.ly/37sWJm6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.