

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு தீர்ப்பினால் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: அதிமுக, திமுக இரண்டும் ஊழல் வழக்குகளின் தீர்ப்பை எதிர்நோக்கி அச்சத்தில் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளிப் போட ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்காது. சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா, அளித்த தீர்ப்பை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தும். இதனால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்படும். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி திமுக அச்சத்தில் உள்ளது. இந்த வழக்கில் தேர்தலுக்குப் பின்னர் தீர்ப்பு வெளியாகும். சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது என்றார்.