திமுக முதல்வர் வேட்பாளரை கருணாநிதிதான் முடிவு செய்வார்: மு.க.ஸ்டாலின் தகவல்

திமுக முதல்வர் வேட்பாளரை கருணாநிதிதான் முடிவு செய்வார்: மு.க.ஸ்டாலின் தகவல்
Updated on
1 min read

திமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று கருணாநிதிதான் முடிவு செய்வார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று கூறினார்.

சென்னை ராயபுரத்தில் நேற்று நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், அங் குள்ள சிறு வணிகர்களிடையே கலந்துரையாடல் செய்தார். அப் போது, ‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் வாட் வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதத்துக்கு குறைக்கப்படும். வட சென்னையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்’’ என்று ஸ்டாலின் கூறினார்.

இதையடுத்து, செய்தியாளர் களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம்:

உங்களை முதல்வர் வேட்பாள ராக்கி திமுக, பாஜக, தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியிரு ந்தாரே?

தேர்தல் நேரங்களில் இது போன்ற யூகங்களும், கருத்துக் களும் வருவது சகஜம் தான். திமுகவை பொறுத்தவரை முதல் வர் யார் என்பதையெல்லாம் கட்சித்தலைவர் கருணாநிதிதான் முடிவு செய்வார். நான் எதையும் சொல்ல முடியாது.

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக குற்றம்சாட்டியது, அவை நீக்கப்பட் டுள்ளதாக கருதுகிறீர்களா?

நாங்கள் கூறிய குற்றச்சாட்டின் பேரில் ஓரளவு போலி வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனி னும், முழுமையாக நீக்கப்படவில்லை. எனவே, இந்த குளறுபடியை சட்ட ரீதியாக அணுகவுள் ளோம்.

‘என்னை பார்த்து தான் ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொள்கிறார்’ என்று அன்புமணி ராமதாஸ் சொல்லியுள்ளாரே?

நான் யாரையும் காப்பி அடிக்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களை காப்பி அடித்து வெற்றி பெறுகிற அவசியம் திமுகவுக்கு இல்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in