ரூ.626 கோடி கோயில் சொத்துகள் மீட்பு: 13 ஆயிரம் கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.130 கோடி

ரூ.626 கோடி கோயில் சொத்துகள் மீட்பு: 13 ஆயிரம் கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.130 கோடி
Updated on
1 min read

தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு உள்ளாகவே, ஆக்கிரமிப்பில் இருந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், காலிமனைகள் என ரூ.626 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் 100 கோயில்களில் தேர், குளம், நந்தவனம்ஆகியவை ரூ.100 கோடியில்சீரமைக்கப்படும். பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.

போதிய நிதி வசதி இல்லாத 12,959 கோயில்களில் ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும். இதில் கிடைக்கும் வட்டி மூலம் தினசரி பூஜை நடத்தப்படும். பழநி முருகன் கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

பக்தர்களின் தரிசன அனுபவத்தை அதிகரிக்க 539 கோயில்களுக்கான பெருந்திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி, பூம்புகாரில் திருவள்ளுவர் சிலைக்கான வசதிகள் சீரமைக்கப்படும். தமிழகத்தில் 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

திருநங்கைகள் ஓய்வூதியம்

மகளிர் கல்வியை ஊக்குவிக்க ரூ.726.23 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில் 3-ம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்துக்காக ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காலத்தில் பெற்றோரை இழந்த 5,963 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, முதல்வர் பொது நிவாரண நிதியில்இருந்து ரூ.95.96 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்கள்

அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48.48 கோடி வழங்கபட்டுள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த பொருட்களை வழங்க ரூ.23.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக்கு முட்டைகள், இதர பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை சீரமைக்கப்படுவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in