நடப்புக் கூட்டத் தொடரிலேயே விருத்தாசலம் மாவட்டம் அறிவிக்கப்படுமா?- நெய்வேலியை தனி வட்டமாக உருவாக்கவும் திட்டம்

விருத்தாசலம் ரயில் நிலைய சந்திப்பு.
விருத்தாசலம் ரயில் நிலைய சந்திப்பு.
Updated on
2 min read

பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே விருத்தாசலம் மாவட்டம் குறித்தஅறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நெய்வேலி, விருத் தாசலம், திட்டக்குடி தொகுதி வாசிகளிடையே எழுந்துள்ளது.

கடலூரை தலைநகரமாகக் கொண்டு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங் களின் ஒருங்கிணைந்த மாவட்டமாக தென்ஆற்காடு மாவட்டம் திகழந் தது. நிர்வாக வசதிக்காக, கடலூர் மாவட்டத்திலிருந்து, விழுப்புரத்தை தலைமையிடமாக்க கொண்டு விழுப்புரம் மாவட்டம் 1993-ம்ஆண்டு உருவாக்கப்பட்டது. இந் நிலையில் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியைத் தலைமை யிடமாக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் 2018-ம் ஆண்டு உரு வாக்கப்பட்டது.

இருப்பினும் கடலூர் மாவட்டம் 3,703 ச.கி.மீட்டர் பரப்பளவுடன், 26 லட்சத்து 5 ஆயிரத்து 914 பேர் வசிக்கும் மாவட்டமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகள், 2 மக்களவைத் தொகுதிகள், கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 10 வருவாய் வட்டங்கள், 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 905 வருவாய் கிராமங்கள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 683 கிராம ஊராட்சிகள் என பரந்து விரிந்துள்ளது. கிழக்கு மேற்குமாக மாவட்டம் 105 கி.மீட்டர் வரை விரிந்திருப்பதால்,மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் இருந்து விருத்தாசலம் 61 கி.மீட்டர் தொலை விலும், திட்டக்குடி, சிறுபாக்கம், மங்களூர் உள்ளிட்டப் பகுதிகள் 101 கி.மீ தொலைவிலும் இருப்பதால் அப்பகுதி மக்கள் அலுவல் பணி களுக்காக தலைநகரம் வந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.எனவே விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட் டம் உருவாக்க வேண்டும் என்பதுஇப்பகுதி மக்களின் நீண்ட நாளையகோரிக்கையாக இருந்து வருகி றது.

தற்போது திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ளதால், தேர்தல் நேர வாக்குறு திகளை முதல்வர் ஸ்டா லின் நிறைவேற்றிவருவதாலும், தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் விருத்தாசலம் மாவட்டம் குறித்த அறிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

அதற்கேற்றார் போல் மாவட் டப் பிரிப்புக்கான பணிகளை வரு வாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, முஷ்ணம் ஆகிய வருவாய் வட்டங்களுடன், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக நெய்வேலி வட்டத்தையும் உரு வாக்கி, 5 வட்டங்கள், 1 கோட்டம் அடங்கிய விருத்தாசலம் மாவட்டம் உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக விருத்தாசலம் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதை தான் செய் வார், செய்வதைத் தான் சொல்வார். அதன்படி தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை செயல்படுத்தி வருகிறார். அதன்படியே விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி தொகுதி வாக்காளர்களின் நீண்டநாள் கனவே நிறைவேற் றுவார்.

எனவே மாவட்டம் உருவாகும், அதற்கான பணிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின் றனர். தமிழகத்தின் கடும் நெருக்கடி சூழலில் இருந்தபோதிலும், பட் ஜெட்டில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட் டுள்ளதால், நடப்புக் கூட்டத் தொடரில் விருத்தாசலம் மாவட்டம் அறிவிக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in