மதுரை மகபூப்பாளையத்தில் போராட்டம் நடத்திய இந்திய தேசிய லீக் கட்சியினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
தமிழகம்
சிறையில் தொழுகை நடத்த அனுமதி கோரி மதுரையில் தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் தொழுகை நடத்த அனுமதிக்கக்கோரி இந்திய தேசிய லீக் கட்சியினர் மகபூப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் இந்திய தேசிய லீக் மாநில இளைஞரணி தலைவர் அல்ஆசி தலைமையில் நிர்வாகிகள் சுலைமான் சேட், சாதிக், அஜ்மல்கான் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், மதுரை மத்திய சிறை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சிறையில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
