Published : 17 Feb 2016 09:05 AM
Last Updated : 17 Feb 2016 09:05 AM

ஆட்சி மாற்றம் வந்தால்தான் முன்னேற்றம் வரும்: ராமதாஸ்

தமிழகத்தில் மாற்றம் வந்தால்தான் முன்னேற்றம் வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை அடுத்த சேந்த நாட்டில் பாமக தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் ராம தாஸ் பேசியதாவது:

தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்தவர்களை வாழ வைத்தோம். அவர்கள் ஆட்சி நடத்தினார்கள். மாற்றம் வந்தால் தான் முன்னேற்றம் வரும். விவ சாயத்தில் முன்னேற்றம் வர வேண்டும். சோறு போடும் விவசாயி கள் நல்லபடியாக வாழ வேண் டும். உயர்ந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு விவசாயம் செய்ய தேவை யான வசதிகளை பாமக செய்து தரும். இலவசமாக உரம், பூச்சிக் கொல்லி மருந்து, விதை மற்றும் ஊராட்சிக்கு ஒரு டிராக்டரை வழங்குவோம் தமிழ்நாட்டில் மத்திய பாடத் திட்டத்துக்கு இணை யான தர மான கல்வியை இலவச மாக வழங்குவோம். இவ் வாறு ராமதாஸ் பேசினார்

அன்புமணி

அவிநாசி - அத்திக்கடவு திட் டப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நேற்று அவிநாசி வந்தார். முன்னதாக கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: காமராஜர் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அத்திக் கடவு - அவிநாசி திட்டம் 50 ஆண்டு களாகியும் திமுக, அதிமுக அரசு களால் நிறைவேறாமல் உள்ளது. பாமக ஆட்சிக்கு வந்த உடனே இத்திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர் போராட்டம் 9-வது நாளை எட்டிய பின்னரும் அரசு பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அனைத் துப் பிரச்சினைகளிலும் அதிமுக மவுனமே சாதிக்கிறது. அரசே ஸ்தம்பிக்கும் அளவில் அரசு ஊழி யர்கள் போராட்டம் வலுவடையும். அதிமுக மீது மக்கள் கடும் கோபத் தில் உள்ளனர்.

திமுக, அதிமுகவுக்கு தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை. ஆனால் பாமக தனித்துப் போட்டி யிடுகிறது. முதல்வர் வேட்பாளரை முதலில் அறிவித்ததும் நாங்கள் தான். மக்கள் நலக் கூட்டணி ஆரம்பத்தில் ஐவராகவும், இன்று நால்வராகவும், இனி மூவராகவும் மாறும். கம்யூனிஸ்ட்களும் வெளி யேற நேரம் பார்த்துக் கொண்டி ருப்பதால் இறுதியில் வைகோ மட்டுமே தனித்திருக்க வேண்டும்.

எனவே மக்கள் நலக் கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x