பட்ஜெட்: மாற்றமில்லை, ஏமாற்றமே எஞ்சுகிறது- கமல் விமர்சனம்

பட்ஜெட்: மாற்றமில்லை, ஏமாற்றமே எஞ்சுகிறது- கமல் விமர்சனம்
Updated on
1 min read

தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பவைக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு சார்பில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முதல்முறையாக இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், ‘‘தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.

வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் நாளை (14-ம் தேதி) தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் ஆக.16 தொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. அதன்பின், ஆக.23-ம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in