அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்: புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கிய புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கிய புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா
Updated on
1 min read

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி, குரும்பகரம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) நடைபெற்றது.

இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 புதிய பயனாளிகளுக்கு மாதம் தோறும் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது: "புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நலத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பொறுப்பேற்றுள்ள அரசின் மூலம் மக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்.

புதுச்சேரி முதல்வர் உதவித் தொகையை உயர்த்தியதன் மூலம் முதியோர், பெண்கள் மிகவும் பயனடைவார்கள்" என்றார்.

மாவட்ட சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in