இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது?- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது?- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

Published on

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கே உரிமைத் தொகை வழங்கல் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.

இதில் உரிமைத் தொகை வழங்கல் திட்டம் பற்றிய அம்சங்கள்

* இத்திட்டத்தின் நோக்கம், நிதியுதவியை இல்லத்தரசிகளுக்கு வழங்குவதே ஆகும். எனவே குடும்ப அட்டையில் உள்ள இல்லத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை.

இத்திட்டம் ஏழ்மையானவர்களுக்கான திட்டமாகும். பயனாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

* கரோனா பெருந்தொற்றின்போது குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது அதுபற்றி விமர்சனங்கள் எழுந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in