

தமிழகம் முழுவதும் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணி முதல் தாக்கல் செய்து வருகிறார்.
அதில் இடம்பெற்றுள்ள கல்வி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள்:
* நடப்பாண்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்
* அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதிசெய்ய எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கு ரூ.66.70 கோடி
ஒதுக்கப்படும்.
* அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதிசெய்ய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க ரூ.114.18 கோடி ஒதுக்கீடு.
* ரூ.10 கோடியில் 25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
* மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும்.
* 413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கணினிகள் 13.22 கோடியில் ஏற்படுத்தப்படும்.
* 865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்