Published : 23 Feb 2016 08:02 AM
Last Updated : 23 Feb 2016 08:02 AM

வாக்குகள் சிதறினால் நிச்சய வெற்றி: ஜெயலலிதாவின் கணிப்பு பலிக்குமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் நெருங்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் ஈடு பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘‘கூட்டணி அமைப்பது குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப் பேன்'' என அறிவித்தார். அதன் பிறகு வெளிப்படையான கூட் டணி நடவடிக்கைகள் எதுவும் அதிமுகவில் காணப்படவில்லை.

திமுகவைப் பொறுத்தவரை தேமுதிகவை தங்கள் கூட்டணிக் குள் கொண்டுவர கடந்த 6 மாதங்க ளாக முயற்சித்து வருகிறது. திமுகவில் சில முக்கியப் புள்ளி களும், மு.க.ஸ்டாலின் குடும் பத்தில் சிலரும் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் விஜயகாந்த் வழிக்கு வருவதாக தெரியவில்லை. இதனையடுத்து திமுகவுக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலம் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அந்த தொழில திபர் கடந்த வாரம் விஜயகாந்தை சந்தித்துப் பேசியதாகவும் ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் உலவி வருகிறது.

இந்நிலையில் ''ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும்'' என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாக தெரிவித்ததும், சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி திமுகவுடனான கூட்டணியை உறுதிபடுத்தியது.

பாமக தனித்துப் போட்டியிடு வதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது. பாஜகவைப் பொறுத்தமட்டில் தேமுதிகவை தங்கள் அணிக்கு கொண்டு வர வலை வீசி வருகிறது. அதேநேரம் தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளை தங்கள் அணிக்கு கொண்டு வர மக்கள் நலக் கூட்டணியும் காய்களை நகர்த்தி வருகிறது.

ஜெயலலிதாவின் தந்திரம்

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகு திகளிலும் தனித்துப் போட்டியிட்டு 37 இடங்களை வென்று அதிமுக வரலாறு படைத்தது. அந்தத் தேர்தலில் திமுகவும் தனித்துப் போட்டியிட்டது. பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, மதிமுகவும், இடதுசாரி கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் 5 முனை போட்டி நிலவியது. அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் எல்லாம் பல திசைகளில் சிதறின. இதனால்தான் அதிமுகவால் 37 இடங்களில் வெல்ல முடிந்தது. அதுபோலவே வரும் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் பல அணிகளாக பிரிந்து நின்றால் ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறி மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என்பது அதிமுகவின் கணக்கு. குறிப்பாக திமுக அணியில் தேமுதிக இடம்பெறவே கூடாது என அதிமுகவினர் எதிர்பார்க் கின்றனர்.

இதன் காரணமாக தாங்கள் யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை விட, திமுகவுடன் யாரை யெல்லாம் அணி சேர விடக்கூடாது என்பதில்தான் முதல்வர் ஜெய லலிதா தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுக அணியில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட சூழலில், தேமுதிகவும் அந்த அணியில் சேர்ந்து விட்டால், அது அதிமுகவுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தக் கூடும். மாறாக, பாஜகவுடனோ அல்லது மக்கள் நலக் கூட்டணியுடனோ தேமுதிக அணி சேர்ந்தால் திமுகவின் ஆட்சி அமைக்கும் கனவை தகர்த்து, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட லாம் என அதிமுக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே, திமுக அணி வலுப் பெறாத வகையில் முதல்வர் ஜெயலலிதா அதற்கான தந்திர நடவடிக்கைகளை ஓராண்டுக்கு முன்பே ஈடுபட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்பே திமுகவுடன் வைகோ நெருங்கி வருவது போன்ற காட்சிகள் புலப்பட்டன. ஸ்டாலின் சகோதரர் திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் வைகோ. இதனால் திமுக - மதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேசப்பட்ட நிலையில், திமுகவை மீண்டும் வைகோ விமர்சிக்கத் தொடங்கினார்.

மேலும் திமுக, அதிமுகவுக்கு எதிரான இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் நலக் கூட்டணி உருவா வதிலும் வைகோ முக்கிய பங்காற்றினார். வரும் பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கும் முனைப்பில் திமுக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக ளுக்கு திமுக வெளிப்படை யாகவே அழைப்பு விடுத்தது. ஆனால் இதற்கு மாறாக மக்கள் நலக் கூட்டணி மலர்ந்தது.

இந்த புதிய அணி திமுகவுக்கு பெரும் தலைவலியாகக் கருதப் படுகிறது. தற்போது அதிமுக வுக்கு எதிராக குரல் கொடுப் பது மட்டுமின்றி, மக்கள் நலக் கூட்டணியின் விமர்சனங்களுக் கும் தினமும் பதிலளிக்க வேண் டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற் பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாகவே ஜெயலலிதா மேற் கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள்தான் இவை எல்லாவற்றுக்கும் முக்கிய கார ணம் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடத்தி வரும் பாஜக வினர் வேறுவிதமாக மந்திரச் சொற்களை வீசி வருகிறார்களாம். “மாறி மாறி திமுக, அதிமுக கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி அமைத்தால் அவர்கள்தான் ஆட் சிக்கு வருவார்கள். நீங்கள் எப்போது ஆட்சிக்கு வரப் போகி றீர்கள். இப்போது இல்லா விட்டாலும் அடுத்தடுத்த தேர் தல்களிலாவது தேமுதிக ஆளும் பொறுப்புக்கு வர வேண்டு மானால், இந்தத் தேர்தலில் திமுக வுடன் அறவே சேரக் கூடாது” என்கின்றனராம். பாஜகவினரின் இந்த மந்திர வார்த்தைகள் கேப் டன் குடும்பத்தாரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநாட்டில் விஜய காந்த் எழுப்பிய முழக்கங்க ளைப் பார்க்கும்போது பாஜக வினரின் மந்திரச் சொற்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டனவோ என எண்ணத் தோன் றுகிறது. ‘நான் கிங் மேக்கராக இருப்பதை விட, கிங் ஆக இருக்க வேண்டும்’ என்றது திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத் தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், “திமுகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைத்து விடக் கூடாது என்பதற்காக உளவுத் துறையுடன் இணைந்து எதிரிகள் சதி செய்கின்றனர்” என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஆக இப்படிப்பட்ட அரசியல் சூழலில், ஒருவேளை பாஜகவின ரின் மந்திரச் சொற்களில் மயங்கி பாஜக பக்கம் கேப்டன் சாய்ந் தாலோ அல்லது மக்கள் நலக் கூட்டணியுடன் அவர் கரம் கோர்த்தாலோ அது ஜெயலலிதா வின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x