Published : 25 Feb 2016 05:56 PM
Last Updated : 25 Feb 2016 05:56 PM

தோனியா? கோலியா? - அஸ்வின் பரபரப்பு பதில்

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், தேர்தல் ஆணையமும் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மீம்ஸ் மற்றும் வாசகங்கள் மூலம் கவன ஈர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

#TN100percent என்ற ஹேஷ்டெக்கில் தேர்தல் ஆணையத்தின் இந்த புதுமையான பிரச்சார பாணி வரவேற்கக்கூடிய விதத்தில் இருக்கிறது. இதுவரை புகைப்படங்களாக தங்களுடைய பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தேர்தல் ஆணையம் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரர் அஸ்வின் மூலமாக வீடியோ வடிவிலும் களம் இறங்கியிருக்கிறது.

இந்த வீடியோ பதிவின் புகைப்படமாக "தோனியா? கோலியா? - அஸ்வின் பதில்" என்று தலைப்பு வைத்து, அதற்கு அஸ்வின் பதிலளித்திருப்பது போன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் அஸ்வின் கூறியிருப்பது:

"ஆமா.. இது தான் இந்த நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி. நீங்க வேற இதுக்கு வந்து இந்த லிங்க்கை கிளிக் பண்ணிட்டு இருக்கீங்க. இந்த நாட்டுக்கு தேவையான கேள்வி எவ்வளவோ இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இதை கேட்கிறீங்க.

முதலில் இந்த தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கா, வாக்களிக்க பதிவு செய்து விட்டீர்களா என்று இந்த நாட்டைப் பற்றி கொஞ்சம் யோசிங்க. தோனியையும் விராட்டையும் பற்றி அவங்க அவங்க யோசிச்சுப்பாங்க. ஒட்டு போடுங்க சார்.. போங்க" என்று தெரிவித்திருக்கிறார் அஸ்வின்.



Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x