பாலியல் புகாரில் பாதிரியார் கைது

கிறிஸ்துதாஸ்
கிறிஸ்துதாஸ்
Updated on
1 min read

சிவகாசியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (43). அப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். அண்மையில் இவரை வில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். அப்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாதிரியார் கிறிஸ்துதாஸ் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூற, அவர்களது புகாரின்பேரில் வில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் பாதிரியாரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in