Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

கூட்டாட்சி தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி; ஓபிசி சட்டத் திருத்தத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் சட்டத் திருத்தம் நிறைவேறியிருப்பது ‘கூட்டாட்சித் தத்து

வத்துக்குக் கிடைத்த வெற்றி’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவளித்த நிலையில், ஏற்கெனவே கடந்த 10-ம் தேதி மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நேற்று முன்தினம் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் இச் சட்டம் அமலுக்கு வரும்.

இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், ‘‘ நூற்றாண்டு கால காயங்களுக்குச் சிறு மருந்தாகவும், சமூக நீதிக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ள இடஒதுக்கீடு வரலாற்றில் இன்னாள் என்றும் நினைவுகூரப்படும். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x