கந்தசுவாமி கோயில் ராஜகோபுர முகப்பில் இருந்த மேற்கூரை அகற்றம்: அமைச்சரின் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி நடவடிக்கை

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் முகப்பில் உள்ள மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி பணியாளர்கள்.
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் முகப்பில் உள்ள மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி பணியாளர்கள்.
Updated on
1 min read

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் ராஜகோபுர முகப்பில் உள்ள மேற்கூரையை அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, ராஜகோபுரத்தின் முகப்பு பகுதியில் கடந்த 2010-11-ம்ஆண்டு பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.12 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்த மேற்கூரையின் நிழலில் சிலர் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கந்தசுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், "கோயிலின் ராஜகோபுரத்தை பக்தர்கள் தரிசிக்க முடியாதபடி இந்த மேற்கூரை மறைக்கிறது. இது தொடர்பாக பக்தர்களிடமிருந்து சில கோரிக்கைகளும்வரப்பெற்றுள்ளன.

எனவே, இந்த மேற்கூரையை அகற்றுங்கள்" என அறநிலையத்துறை ஆணையருக்கு அறிவுறுத்தினார்.

இதன்பேரில் கந்தசுவாமி கோயில் நிர்வாகம், சந்நிதி தெருவில் உள்ள மேற்கூரையை அகற்றுமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்குகடிதம் வழங்கியது. இதன்பேரில்,பேரூராட்சி பணியாளர்கள் நேற்றுமேற்கூரையை அகற்றும் பணியைமேற்கொண்டனர். அப்போது மேற்கூரையின் கீழே இருந்த சில கடைகளையும் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

மேற்கூரை அகற்றப்பட்டதால் கந்தசுவாமி கோயில் ராஜகோபுரத்தை பக்தர்கள் சுலபமாக தரிசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in