பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆலோசனை

பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆலோசனை
Updated on
1 min read

பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரையும், எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. சென்னை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 51 ஆயிரத்து 91 மாணவ-மாணவிகளும், எஸ்எஸ்எல்சி தேர்வை 53 ஆயிரத்து 548 பேரும் எழுத உள்ளனர். இந்த நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள், வினாத்தாள்களை பாதுகாப்பாக மையங்களுக்கு கொண்டுசெல்வது, தேர்வு நேரத்தில் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவது, தேர்வுகள் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் நடக்க பறக்கும் படைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in