எஸ்.பி.வேலுமணி வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கம்

எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்
எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 10-ம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஏராளமான சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு நிதி ஆவணம், வங்கி லாக்கர் சாவிகள், ரூ.13 லட்சம் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (ஆக. 12) முடக்கி வைத்தனர். குறிப்பாக, ரூ.2 கோடி வைப்பு நிதி வைக்கப்பட்டிருந்த வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளனர்.

மேலும், எஸ்.பி.வேலுமணி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில், அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சோதனையின்போது சிக்கிய அனைத்து நிறுவனங்களின் வங்கி கணக்குகளையும் முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in