பணம் தராமல் ரேஷனில் அரிசி தர வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயத்திடம் பெண்கள் முறையீடு

ரேஷனில் அரிசி தர வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து பணி தர வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயத்திடம்  முறையிட்ட பெண்கள்.
ரேஷனில் அரிசி தர வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து பணி தர வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயத்திடம் முறையிட்ட பெண்கள்.
Updated on
1 min read

ரேஷனில் அரிசி தர வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து பணி தர வேண்

டும் என்று அமைச்சர் நமச்சிவாயத்திடம் கிராமப்புற பெண்கள் முறையிட்டனர்.

100 நாள் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதுச்சேரி கூனிச்சப்பட்டு கிராமத்தில் ரூ. 30 லட்சத்தில் ஏரி தூர்வாரும் பணி,ரூ. 6.5 லட்சத்தில் செட்டிப்பட்டு வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகியவற்றை அமைச்சர் நமச்சிவாயம் தொடக்கி வைத்தார்.

அப்போது அப்பகுதி பெண்கள் அமைச்சரை சூழ்ந்து கொண்டுபல கோரிக்கைகளை வைத்தனர்.குறிப்பாக, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். கரோனாவால் வேலைவாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து வேலை வாய்ப்பை தர வேண்டும்.

ரேஷனில் மீண்டும் பழைய முறைப்படி அரிசி தர வேண்டும். அரிசிக்குப் பதில் பணம் வேண்டாம் என்று முறையிட்டனர்.

அதற்கு அமைச்சர் நமச்சிவா யம், "ஏற்கெனவே இருந்த ஆளுநர் அரிசிக்குப் பதிலாக பணம் தர உத்தரவிட்டார். அதனால் அதுபோல் தந்தனர். தற்போது அரிசி தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து 100 நாள் திட்டத்தில் வேலை தர நடவடிக்கை எடுக்கிறோம்" என்று குறிப்பிட்டார். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி மற்றும் இலவச காப்பீட்டுத் திட்டத்தை தருமாறு பெண்கள் கோரினர். அதற்கு, "ஏழ்மையில் இருப்போருக்கு உதவவே சிறப்புதொகுப்பு அரிசி, காப்பீடு திட்டங்களை தந்துள்ளோம்" என்று அமைச்சர் விளக்க மளித்தார். பின்னர் அப்பகுதி விவசாயிகள்அமைச்சரிடம், "மணலிப்பட்டு படுகை அணையை ஒரு அடி உயர்த்த வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும்" என்றனர். அதற்கான பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்தார்.

அதைத்தொடர்ந்து மணலிப்பட்டு ஏரியை ரூ. 32.7 லட்சத்தில் சீரமைக்கும் பணியும் ஜேசிபி இயந்திரம் மூலம் தொடங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in