மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் உக்ரைன் சிறுவனுக்கு பொருத்தப்பட்டது: கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் உக்ரைன் சிறுவனுக்கு பொருத்தப்பட்டது: கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தது
Updated on
1 min read

கோயம்புத்தூரில் சாலை விபத் தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு உக்ரைன் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கோயம்புத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் (20). சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இவர், கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். அதன்படி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் மற்றும் கண்களை எடுத்தனர்.

உக்ரைன் சிறுவன்

சிறுநீரகங்கள், கல்லீரல் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் மாற்று இதயத்துக்காக சிகிச்சை பெற்றுவரும் உக்ரைன் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் முரளி, மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் கோவை சென்று இதயத்துடன் 10.01 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டனர்.

இதயம் பொருத்தம்

விமானம் 10.35 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் 10.37 மணிக்கு புறப்பட்டு 10.52 மணிக்கு (15 நிமிடம்) அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு இதயம் கொண்டுசெல்லப்பட்டது. மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழு தானமாக கிடைத்த இதயத்தை உக்ரைன் நாட்டு சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.

முதல் முறையாக கணையம்

இன்சுலின் சரியாக சுரக்காததால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு கணையம் மாற்று சிகிச்சை செய்வதே தீர்வாக இருந்தது. அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் கோவை சென்று கணையத்தை பெற் றுக்கொண்டு விமானம் மூலம் 1.27 மணிக்கு சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் கணையத்துடன் 1.50 மணிக்கு புறப்பட்டு 1.58 மணிக்கு (8 நிமிடம்) அப்போலோ மருத்துவமனைக்கு சென்றது.

மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் அனில் வைத்தியா, இளங்குமரன் ஆகியோர் தானமாக கிடைத்த கணையத்தை சென்னையை சேர்ந்த ஆணுக்கு வெற்றிகரமாக பொருத்தினர். இது தொடர்பாக டாக்டர் இளங்குமரன் கூறும்போது, “இந்தியாவில் முதல் முறையாக கணையம் மட்டும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடலில் இருந்து கணையத்தை எடுத்த 8 மணி முதல் 10 மணி நேரத்தில் மற்றொருவருக்கு பொருத்தலாம். ஆனால் 5 மணி முதல் 6 மணி நேரத்துக்குள் பொருத்தினால் நல்லது. நாங் கள் 5 மணி நேரத்தில் பொருத்தி விட்டோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in