Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

‘மிஸ் தமிழ்நாடு’ அழகி பட்டம் பெற்ற மதுரை பெண்

‘மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்ற மாணிகா

மதுரை

ஆக்ராவில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று மதுரை பெண் சாதித்துள்ளார்.

ஆக்ராவில் ‘ஸ்டார் லைப்’ என்ற அமைப்பு சார்பில் ‘மிஸ்டர் இந்தியா’ மற்றும் ‘மிஸ் இந்தியா’ 2020-21 ஆணழகன், அழகி போட்டிகள் நடந்தன. மிஸ் இந்தியா பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி உட்பட நாடு முழுவதும் இருந்து 30 பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகம் சார்பில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள புதுதாமரைப்பட்டியைச் சேர்ந்த மாணிகா (22) உட்பட பலர் கலந்து கொண்டனர். இவற்றில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணிகா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மாணிகாவுக்கு இதுதான் முதல் அழகி போட்டி என்பதால் இறுதிச்சுற்றில் மிஸ் இந்தியா பட்டத்தை தவறவிட்டார். ஆனால், அவருக்கு ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் நாடு முழுவதுமிருந்து பல்வேறு மாநில பெண்கள் கலந்து கொண் டாலும், மிஸ் இந்தியா பட்டத்தை தவிர மிஸ் தமிழ்நாடு, மிஸ் மகாராஷ்டிரா, மிஸ் கர்நாடகா ஆகிய மூன்று பட்டங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

இதில் மதுரையைச் சேர்ந்த மாணிகா “மிஸ் தமிழ்நாடு” பட்டம் பெற்று அசத்தியுள்ளார். இவர் பிடெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x