ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும் ஆசிய அளவிலான சாதனை மகிழ்ச்சியளிக்கிறது: திருச்சி தடகள வீரர் ஆரோக்கியராஜீவ் பெருமிதம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்-க்கு நேற்று திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த உறவினர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்-க்கு நேற்று திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த உறவினர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும் ஆசிய அள வில் சாதனை புரிந்தது மகிழ்ச்சிய ளிக்கிறது என தடகள வீரர் ஆரோக்கியராஜீவ் தெரிவித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தடகள அணியின் தொடர் ஓட்ட பிரிவில் திருச்சி மாவட்டத்திலிருந்து லால் குடியைச் சேர்ந்த ராணுவ வீரரான ஆரோக்கியராஜீவ், குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், கூத்தைப் பார் பகவதிபுரத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டிகளில் இவர்கள் பதக்கம் வெல்ல முடியவில்லை. எனினும் முகமது அனஸ் யஹியா, நோ நிர்மல் டாம், ஆரோக்கியராஜீவ், அமோஜ் ஜேக்கப் ஆகிய வீரர்கள் இடம் பெற்ற ஆண்கள் அணியினர் 4x400 தொடர் ஓட்டத்தில் குறைந்த நிமிடங்களில் (3:00:25) பந்தய தூரத்தைக் கடந்து ஆசிய அளவில் சாதனை படைத்தனர்.

இந்நிலையில் ஜப்பானில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பிய தடகள வீரர் ஆரோக்கி யராஜீவ் நேற்று சென்னை யிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சிக்கு வந்தார். ரயில் நிலையத்தில் அவரது தாய் லில்லி சந்திரா, மனைவி அனுஷா, மகள் அதீனா உள்ளிட்ட குடும்பத்தினர், பயிற்சியாளர் லால்குடி ராமச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, மாவட்ட தடகள சங்கச் செயலாளர் டி.ராஜூ, பொருளாளர் ரவிசங்கர், செயற்குழு உறுப்பினர் கே.சி.நீலமேகம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது ஆரோக்கியராஜீவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஒலிம்பிக் போட்டியில் 2-வது முறையாக பங்கேற்று இந்திய அணிக்காக ஓடியதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆண்கள் பிரிவில் இம்முறை பதக்கம் வெல் வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. ஆனால் களத்தில் செய்த சிறிய தவறுகளால் பதக்கம் வெல்ல முடியவில்லை. கரோனா, ஊரடங்கு போன்ற பிரச்சினைகளையும் தாண்டி கடுமையான பயிற்சி மேற்கொண் டிருந்த போதிலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாதது வருத்தமளிக்கிறது. அதேசமயம் ஆசிய அளவிலான சாதனை புரிந்தது மகிழ்ச்சியாகவும், ஆறு தலாகவும் இருந்தது. அடுத்து நடைபெறக்கூடிய உலக சாம்பி யன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in