கடல்சார் துறையில் ரூ.6,200 கோடிக்கு அந்நிய முதலீடு கிடைக்கும் வாய்ப்பு: கப்பல் துறை துணை செயலாளர் தகவல்

கடல்சார் துறையில் ரூ.6,200 கோடிக்கு அந்நிய முதலீடு கிடைக்கும் வாய்ப்பு: கப்பல் துறை துணை செயலாளர் தகவல்
Updated on
1 min read

கடல்சார் துறையில் சுமார் 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுவதாக மத்திய கப்பல் துறை துணை செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடல்சார் இந்திய உச்சி மாநாட்டையொட்டி முதலீட்டாளர் களை ஈர்ப்பதற்கான கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. ‘அசோசெம்’ மற்றும் சென்னை துறைமுகம் இணைந்து ஏற்பாடு செய் திருந்த இக்கருத்தரங்கில் மத்திய கப்பல் துறை துணை செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை துறை முக தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார், துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ், அசோசெம் தென்மண்டல வளர்ச்சி கவுன்சிலின் தலைவர் ரவீந்திர சன்னாரெட்டி, துணைத் தலைவர் வினோத் சுரானா, சென்னை தொழில் வர்த்தக சபையின் லாஜிஸ்டிக் குழு தலைவர் யு.உதயபாஸ்கர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கப்பல் துறை துணை செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

மும்பையில் நடைபெற உள்ள கடல்சார் இந்திய உச்சி மாநாடு கப்பல் துறை அமைச்சகம் மூலம் முதல்முறையாக நடத்தப்படுகிறது. கடல்சார் துறையில் செயல்பட்டு வருபவர்களுக்கிடையே தொடர்பு கள், பரிமாற்ற செயல்பாடுகள் ஏற்பட ஒரு சிறந்த தளமாக விளங்கும். இந்த மாநாட்டின் மூலம் 200 திட்டங்கள் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, துறைமுகங்களில் சாலை, ரயில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

குளச்சல் துறைமுகத்தில்...

மேலும், இந்த மாநாட்டின் மூலம் சுமார் 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. குளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் பெற மத்திய அமைச்சரவைக்கு திட்டம் தொடர் பான ஆவணங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவேற் றப்பட்டால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

இவ்வாறு பி.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

கருத்தரங்கில் சென்னை துறை முக தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் பேசும்போது, இந்திய கடல்சார் உச்சி மாநாடு ஏப்ரல் 14 முதல் 16-ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். மாநாட்டில் 30 நாடுகள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன. கொரியா இம்மாநாட்டின் முக்கிய பங்கு உறுப்பினர் நாடாக இருக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் கப்பல் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதன் மூலம் நம்நாட்டில் உள்ள துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு உயரும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in