

கூவத்தில் மாசு ஏற்படுத்தும் தனியார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள் ளது.
கூவம் ஆற்றை புனரமைக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த டேவிட் வில்சன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந் திய 1-ம் அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த அமர்வு, கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆறு முழு வதையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சிபிசிஎல், மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவ னம், எண்ணூர் அனல் மின் நிலை யம் ஆகியவை கூவம் ஆற்றில் மாசு ஏற்படுத்துவதாக மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் ஏற்கெனவே அமர்வில் தெரிவித்திருந்தது. அத னைத் தொடர்ந்து அந்நிறுவனங்கள், இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில் நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகி யோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் யாஸ்மின் அலி தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூவம் ஆற்றில் சிந்தாதிரி பேட்டை, திருவேற்காடு போன்ற பகுதிகளில் மாசு ஏற்படுத்தி வந்த 12 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அதன் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, தாய் மூகாம்பிகை பல் மருத் துவக் கல்லூரி, தாய் மூகாம் பிகை பாலிடெக்னிக் ஆகிய 5 நிறு வனங்கள் கூவம் ஆற்றை மாசு படுத்தி வருகின்றன என்று அறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் கூறியுள்ள 5 நிறுவனங்கள், இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்நிறுவனங்கள் தொடங் கப்பட்டு, செயல்பட்டு வரும் காலம், மாசு ஏற்படுத்தி வரும் காலம், அதைத் தடுக்க அந்நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமர்வின் உறுப் பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.