தேமுதிக மாநாட்டில் கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப்பாரா?

தேமுதிக மாநாட்டில் கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப்பாரா?
Updated on
1 min read

தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடு நாளை நடப்பதை யொட்டி தேமுதிக தொண் டர்கள் இன்று முதலே சென்னை மற்றும் காஞ்சி புரம் நோக்கி வர ஆரம் பித்துள்ளனர். இதற் கிடையே கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப் பாரா என்ற உச்சகட்ட எதிர் பார்ப்பில் திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகி யவை உள்ளன.

தேர்தல் நேரங்களில் தேமுதிக சார்பில் நடத்தப் படும் மாநாடுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தும். 2011-ல் சேலத்தில் உரிமை மீட்பு மாநாடு, 2014-ல் விழுப்புரத்தில் ஊழல் ஒழிப்பு மாநாடு போன்ற வற்றை தேமுதிக நடத்தி யது. அந்த வகையில், 2016 தேர்தலையொட்டி அரசியல் திருப்புமுனை மாநாட்டை தேமுதிக நாளை நடத்தவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் காஞ்சிபுரத்தை அடுத்த வேடலில் கடந்த 2 வார மாக தீவிரமாக நடந்து வருகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் நடத்தப்பட்ட மக்களுக்காக மக்கள் மாநாட்டை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்த செங்கல்பட்டு எம்.எல்.ஏ. அனகை முருகேசன், தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டவர்களின் மேற்பார்வையில் மாநாட்டுப் பணிகள் நடக்கின்றன.

தேமுதிக மாநில மாநாட்டுக்கான மேடை 80 அடி நீளம், 40 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை போன்ற நுழைவுவாயில் அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. 100 ஏக்கருக்கும் அதிகமான அளவிலுள்ள மாநாட்டுத் திடலில் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாநாடுகளைக் காட்டிலும் இந்த மாநாட்டில் அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று கோயம்பேட்டில் கடந்த 5-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகாந்த் வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்த சூழலில், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றே சென்னை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு

காஞ்சிபுரத்தில் நாளை நடக்கவுள்ள தேமுதிக மாநாட்டில் தொண்டர்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு காஞ்சிபுரம் வேடலில் 20-ம் தேதி (நாளை) நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக நிர் வாகிகள், தொண்டர்கள் என அனை வரும் தங்களது குடும்பத்தார், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து வரவேண்டும். சட்டப் பேரவை தேர்தலையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும்’ என்ற கோஷத்துடன் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாட்டை வெற்றிபெறச் செய்ய அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in