

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசு தொடர்ந்து பேசி வருவது, தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அடாவடித்தனமாக செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, அதற்கு ஆதரவாக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக மாநிலத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் ஆக.11-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சங்கத்தின் மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.