தேக்கடியில் சுற்றுலா பயணிகளை கவர நுழைவு , படகு சவாரி கட்டணம் குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்.
முல்லைப் பெரியாறு அணையில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கையை அதிகரிக்க தேக்கடி யில் நுழைவுக் கட்டணம் மற்றும் படகு சவாரிக்கான கட்டணங்களை கேரள சுற்றுலாத்துறை குறைத் துள்ளது.

முல்லை பெரியாறு அணை யில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் இருந்து தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 என்று 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தலா ஒன்றரை மணி நேர பயணம் ஆகும். கரோனா தொற்றால் ஏப்.27-க்குப் பிறகு படகுகள் இயக்கப்படவில்லை. தற்போது கேரளாவின் பல பகுதிகளில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தேக்கடியில் நேற்று முன்தினம் முதல் படகுகள் இயக்கப்பட்டன. ஆனால் குறைவான பயணிகளே வந்திருந்தனர். சுற்றுலாப் பயணிகளை கவர கேரள சுற்றுலாத்துறை தேக்கடியில் கட்டணங்களை குறைத்துள்ளது. கரோனா பாதிப் புக்கு முன்பு நுழைவுக்கட்டணம் ரூ.70, படகு சவாரிக்கு ரூ.385-ம் வசூலிக்கப்பட்டது. தற்போது நுழைவுக் கட்டணம் ரூ.45 ஆகவும், படகு சவாரிக்கு ரூ.255 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

கேரள சுற்றுலாத் துறையினர் கூறுகையில், அடுத்தடுத்து பண்டிகை வருவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றனர். இருப்பினும் கூட்டம் குறைந்ததற்கு கேரளாவுக்குச் செல்ல கரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் கேட்பதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in