5 மீனவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு

5 மீனவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த கலைமதி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் விக்னேஷ், பழனி, மணிகண் டன், செல்வநாதன், திலீப் ஆகிய 5 மீனவர்களும், கோட் டைப்பட்டினத்தைச் சேர்ந்த ஜான்பீட்டருக்குச் சொந்த மான விசைப்படகில் கோட் டைச்சாமி, மெரிட்சன், ஜெமினி, பரமசிவம் ஆகிய 4 மீனவர்களும் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தனித்தனியே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் தனித்தனியாக சிறைபிடித்து ஊர்க்காவல் துறை நீதிபதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தினர். இவர்களை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேர் மீது ஊர்காவல்துறை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in