

கரோனா தொற்று கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்தபடியே பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘வர்மம் தெரபி’ எனும் ஆன்லைன் பயிற்சி ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது.
கரோனா தொற்றைத் தடுக்கும்விதமாக பலரும் வீடுகளிலேயே இருக்கிறார்கள். இந்நிலையில், அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில், ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘வர்மம் தெரபி’ எனும் ஆன்லைன் பயிற்சியை 5 நாட்கள் நடத்துகிறது.
ஆகஸ்ட் 23 முதல் 27-ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிமுதல் 7.30 மணி வரை இப் பயிற்சிநடைபெறவுள்ளது. வர்மம் தெரபியின் நுட்பங்களை விளக்குதல், நோய்களுக்கேற்ப வர்மம் தெரபி சிகிச்சை அளிக்கும் முறைகள், சுயமாக வர்மம் சிகிச்சையை எப்படி மேற்கொள்வது, மாணவர்கள் வர்மம் தெரபியிலுள்ள படிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் ஆகியவை பற்றி விரிவான முறை யில் பயிற்சியளிக்கப்படும்.
இந்த வர்மம் தெரபி பயிற்சியை பல்லாண்டு கால அனுபவமிக்க புகழ்பெற்ற வர்மம் தெரபி மருத்துவர் தர்மேஷ் குபேந்திரன் வழங்க உள்ளார். இந்தப் பயிற்சியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பவர்கள் https://connect.hindutamil.in/event/115-varmam-theraphy.html என்ற இணையதளத்தில் ரூ.589 பதிவுக் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.