

சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக கணேஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், இந்திய ரயில்வே சர்வீஸ்ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்ஸ் (ஐஆர்எஸ்இஇ) 1991-ம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்தவர். ரயில்வேயில், கிழக்கு ரயில்வே, வடமத்திய ரயில்வே மற்றும் சித்தரஞ்சன் இன்ஜின் தொழிற்சாலையில் தலைமை மின் இன்ஜின்பொறியாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், ரயில்வேயின் பல்வேறு துறைகளில் பணியாற்றியஅனுபவம் பெற்றவர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பின், இயக்குநராக அவர் 7 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளராக இதுவரை பணியாற்றி வந்த பி.மகேஷ் பதவிக்காலம் நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து, சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக கணேஷ், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மற்ற அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தத் தகவல், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.