மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 25,617 பேர் பயன் அடைந்துள்ளனர்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 25,617 பேர் பயன் அடைந்துள்ளனர்
Updated on
1 min read

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்ட 3 நாட்களில் 25,617 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்ப்பிணிகளுக்கு தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் (60 சதவீதம்) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாதொற்று காலத்தில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இத்தகைய இறப்பைத் தடுப்பதற்காகவே மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 3 நாட்களில் 25,617 பேர் பயனடைந்துள்ளனர்.

திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 230 டன் அளவில்தான் ஆக்சிஜன் இருந்தது. தற்போது 1,000 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in