ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவினர் இடையே மோதல்: ஒருவருக்கு மண்டை உடைப்பு

சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நிர்வாகி சோமன்.
சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நிர்வாகி சோமன்.
Updated on
1 min read

சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவ ருக்கு மண்டை உடைந்தது.

சிவகங்கை தொண்டி சாலை யில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பொறியாளர் அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் உள்ளன. நேற்று நிர்வாகப் பொறியாளர் அலுவ லகத்தில் 27 குடிநீர் பராமரிப்புப் பணிகள், கண்காணிப்புப் பொறி யாளர் அலுவலகத்தில் 6 குடிநீர் பராமரிப்புப் பணிகள் என 33 பணிகள் ரூ.3.5 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டன.

இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தரப்பி னருக்கும், சிவகங்கை ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சோமன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மோதலாக மாறி, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் சோமனின் மண்டை உடைந் ததால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் காரை சேதப்படுத்தினர். போலீ ஸார் இரு தரப்பினரையும் சமரசப் படுத்தினர். காயமடைந்த சோமன் சிவகங்கை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in