தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர்
Updated on
1 min read

தமிழகத்தில் ஜிகா வைரஸ் நோயைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நோய் பரவ வாய்ப்பு அறவே இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஜிகா வைரஸ் மூலம் பரவும் நோய் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி, கூடுதல் இயக்குநர் பி.வடிவேலன், இணை இயக்குநர் எஸ்.சரவணன் உட்பட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

ஜிகா வைரஸை உலக சுகாதார நிறுவனம் “உலகளாவிய பொதுசுகாதாரம் அவசரநிலை” என பிரகடனப்படுத்தியுள்ளது. ஜிகா வைரஸ் இன்னும் இந்தியாவில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் தமிழகத்தில் ஜிகா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. காய்ச்சல், தோலில் அரிப்பு, கண் சிவப்பு, மூட்டுவலி, உடல் சோர்வு, தலைவலி போன்றவை ஜிகா வைரஸின் அறிகுறிகளாகும். ஜிகா வைரஸ் நம் நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தும், அந்த நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக் கள் ஒழிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு அறவே இல்லை. தமிழகத்தில் உள்ள துறைமுகம், விமானநிலையம் ஆகிய இடங்களில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோயின் அறிகுறிகள் உள்ளதா என பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜிகா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in