பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்குப் படைத்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை

பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்குப் படைத்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்குப் படைத்து ஆளுநர் தமிழிசை வழிபட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக உள்ளார். தமிழகத்தில் ஆடிப் பண்டிகை கொண்டாடுவது போல் தெலங்கானாவில் "போனாலு" என்ற கலாச்சாரப் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நிறைவு விழா ஆடி அமாவாசை அன்று நடக்கும். அந்நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை தெலங்கானா சென்றுள்ளார்.

தெலங்கானா ராஜ்பவனில் ஆடி அமாவாசையான நேற்று நடைபெற்ற போனாலு திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர். தெலங்கானாவில் நடைபெறும் பாரம்பரிய வழிமுறைகளைச் செய்ய ஆளுநர் தமிழிசை விரும்பினார். அதையடுத்து அவர் பாரம்பரிய முறைப்படி போனாலு பூஜையில் பங்கேற்றார். அவர் ராஜ்பவனில் பொங்கல் வைத்து, அதைத் தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in