Published : 25 Feb 2016 10:06 AM
Last Updated : 25 Feb 2016 10:06 AM

சமூக வலைதளங்களில் கட்சிகளின் விளம்பர யுத்தம்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், விளம் பரங்கள் மூலம் கட்சிகளின் பிரச் சாரம் தொடங்கியுள்ளது. 5 ஆண் டுகளில் முதல்வரை நேரில் பார்த்திருக்கிறீர்களா? என கேட்டு ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..’ என்ற விளம்பரத்தை பத்திரிகைகள், டி.விகளில் திமுக செய்திருந்தது. இதற்குப் பதிலடியாக, கருணா நிதியை சட்டசபையில் பார்த்தி ருக்கிறீர்களா.. சட்டசபையில் ஸ்டாலின் பேசி பார்த்திருக்கி றீர்களா.. என அதிமுகவினரும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள னர். இந்த விளம்பர யுத்தம், முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்க ளிலும் பரவி வருகிறது.

இந்நிலையில் அதிமுக, திமுக விளம்பரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘பகட்டு அரசியலை வீழ்த்துவோம்’ என்ற தலைப்பில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியினரும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இரண்டு கட்சிகள் மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை கிண்டலடிக்கும் போஸ்டர்களை சமூக ஊடகங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் பகிர்ந்து வருகின்றனர். அதே போல பாமகவினரும் அதிமுக, திமுகவை கிண்டலடிக்கும் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். அரசி யல் கட்சிகளுக்கு இடையேயான இந்த விளம்பர யுத்தம், தேர்தல் களத்தை சூடேற்றி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x