

புதுச்சேரியில் தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் வழங்கப் படுவதில்லை. இதற்கு தமிழ் அறியாத வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இயல்,இசை, நடனம், ஓவியம் உட்படபல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குவோருக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருதுக ளும், தமிழுக்கு சிறந்த தொண்டுபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச் சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது. முன்பு கலைமாமணி விருதுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்கப்பதக்கமும், தமிழ்மாமணி விருதுக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
கடந்த 2008-09-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு 46 பேரும், தமிழ்மாமணி விருதுக்கு 6 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த விழாவில் அப்போதைய துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் பங்கேற்று விருதுகளை வழங் கினார். அப்போது, அவர்களுக்கு விருதுடன் தங்கப்பதக்கம் வழங்கவில்லை. அப்போதே அதுபற்றி கேட்டதற்கு, ‘தங்கப் பதக்கத்தில் பெயர் பொறித்து தர காலஅவகாசம் தேவை’ என்று அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது.
ஓராண்டு கழிந்தும் தங்கப் பதக்கம் வழங்காததால் விருதுபெற்றவர்கள் ஒன்று சேர்ந்து 2011-ம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலர் சத்தியவதி யிடம் முறையிட்டனர். அதற்கு, ‘விருது வழங்கிய காலத்தை விட தற்போது தங்கம் விலை உயர்ந்துவிட்டது. எனினும், விரைவில் பதக்கம் தருவோம்’ என தெரிவித்தார். அதன்பிறகு, விருது பெற்ற காலத்தின் தங்க விலைக்கு ஏற்ப 2 சவரனுக்கான தொகையை கலைமாமணி விருது பெற்ற 46 பேருக்கு மட்டும் அரசு வழங்கியது.
ஆனால், அப்போது தமிழ் மாமணி விருது பெற்ற நந்திவர்மன், சித்தன், பரிதி வெங்கடேசன், திருமாவளவன், அருணாச்சலம், நாகராசன் ஆகிய 6 பேருக்கு தங்கப்பதக்கத்துக்கான பணம் தரவில்லை.
இதுதொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானதால் கடந்த 2015-ல் ஆளுநர் உத்தரவின்பேரில் 6 பேருக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் சரியாக வழங்கப்படாமல் இருந்தது. மீண்டும் 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014 வரை 5 ஆண்டுகளுக்கான தமிழ்மாமணி மற்றும் தெலுங்கு ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது மற்றும் பண முடிப்பு நிகழ்வு சட்டப்பேரவை கமிட்டி அறையில் நடத்தப்பட்டது. அதில் 21 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. அதேநேரத்தில் தங்கப்பதக்கம் தரும் வழக்கத்தை கைவிட்டனர்.
அதில் கலைமாமணி விருது பெற்ற 11 பேருக்கு தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாக அப்போதைய துணைநிலை ஆளுநர்கிரண்பேடியிடம் புகார் அளிக்கப் பட்டு விசாரணையும் நடந்தது.
இந்நிலையில் தற்போதைய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம், புதுச்சேரி சிந்தனையாளர் பேரவையினர் அளித்த மனுவில், “தமிழ்மாமணி, கலைமாமணி விருது வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி சிந்தனையாளர் பேரவைத் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான செல்வம் கூறுகையில், “புதுச்சேரி யில் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தமிழ் மாமணி மற்றும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படவில்லை. தமிழ் அறிஞர்களுக்கு கம்பன் புகழ் பரிசு, ஆய்வுக்கு தொல்காப்பியர் விருது, சிறுவர் நூலுக்கு நேரு புகழ் பரிசு தரப்படும். அத்துடன் தலா ரூ.10 ஆயிரம் பரிசும் தரப்படும்.
அனைத்து தமிழ்மொழி தொடர் பான பணிகள் முடங்கியுள்ளன வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ்அதிகாரிகள் கோப்புகளில் எழுதிய பல்வேறு முறையற்ற காரணங்களால் தற்போது வழங்கப்படாமல் உள்ளதாக நம் பத்தகுந்த வட்டாரங்கள் தெரி விக்கின்றன” என்று குறிப்பிட்டார்.