மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
Updated on
1 min read

சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் நேற்று தானம் செய்யப்பட்டன.

சென்னை தண்டையார் பேட்டை நாவலர் நகர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு. இவரது கணவர் எம்.மணிமாறன் ஏற் கெனவே இறந்துவிட்டார். அல மேலு அங்குள்ள திருமண மண்டபத்தில் பணி யாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூன்றாவது மகன் எம்.சூர்யா. விவேகானந்தா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட் டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இவர் அரசு ஸ்டான்லி மருத்து வமனையில் கடந்த 31-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்த நிலை யிலும் கடந்த 3-ம் தேதியன்று அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உடல் உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர், குடும்ப உறுப்பினர் களின் முழு மனதுடன் உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெற்ற பிறகு கல்லீரல், இதயம், நுரையீரல், வலது மற்றும் இடது சிறுநீரகம் மற்றும் கருவிழிகள் தானமாக வழங்கப்பட்டன. பெறப்பட்ட உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு பொருத் தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in